R.Maheshwary / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
1000 ரூபாவை பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த இ.தொ.கா பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இ.தொ.கா இன்று 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை யாரும் நிராகரிக்கவோஇ மறுக்கவோ முடியாது என்றார்.
ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஒன்றை இன்று (18) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நுவரெலியா மாவட்டத்துக்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான பணிகள் ஒரிரு ஆண்டுகளில் நிறைவடையும். இ.தொ.கா இந்த நிலையத்தை வைத்து மற்றவர்களை போல் அரசியல் நடத்தாது. இந்த நிலையம் அமைய பெறுவதற்கு விஜயலக்ஷ்மி தொண்டமான் பெரும்பங்கு ஆற்றியுள்ளார் என்றார்.
சிலர் இ.தொகாவை காட்டிக்கொடுத்தனர் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். எனவே பழையவைகளை மறக்க கூடாது. வரலாறும் முக்கியம். என்றார்.
இந்த தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் நிலையமானது, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago