2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தனியாக வசித்து வந்த பெண் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் குறித்து எந்த தகவலும் இல்லாததால், 14ஆம் திகதி  வீட்டை சோதனை செய்தபோது, ​​வீட்டுக்குள் பெண் சடலமாக கிடைப்பதை அவதானித்து,  அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன்,கடந்த 14ஆம் திகதி மாலை 06 மணி முதல் மறுநாள் 09ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

நீதவான் சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .