Kogilavani / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகள், வாகனங்களைச் செலுத்தும்போது தொலைபேசி பேசுவதற்குத் தடைவிதித்துள்ளதாக, ஊவா மாகாண சபை தனியார் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுசில் குமார தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் அதிகரத்து வரும் வாகன விபத்துகளுக்கு, தொலைபேசி பாவனையும் ஒரு காரணமாகியுள்ளதாகவும் இது தொடர்பாக தமக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் தினமும் கிடைத்துவரும் முறைப்பாடுகளையடுத்தே, சேவை நேரங்களில் சாரதிகளுக்கு தொலைபேசி பேசத் தடைவிதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தடை உத்தரவை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பாக, 055-2322022 அல்லது 1955 இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தகவல் தருமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊவா மாகாணம் பனிமூட்டம் நிறைந்த மலைப்பாங்கான பிரதேசம் என்பதால், இத்தினங்களில் அடிக்கடி மழைபெய்து வருவதாலும் வீதிகளில் வழுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால், சாரதிகள் மிகக் கவனமாக தத்தமது வாகனங்களைச் செலுத்தி விபத்துகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறும் கோட்டுக்கொண்டார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago