Editorial / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த 50 வயதான நபரொருவரை, தனியார் பஸ்ஸொன்று முட்டி மோதியதில், அந்த நபர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம், நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் ஹைபொரஸ்ட் இலக்கம் 2 குருந்து ஒயா தோட்டத் தொழிற்சாலைக்கு அருகில் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தில் வசிக்கும் வீரையா காந்தி (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அடுத்து தனியார் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான வலப்பனை நீதவானின் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியை வலப்பனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago