2026 ஜனவரி 21, புதன்கிழமை

தனியார் வர்த்தக நிலையங்களில் 950 ரூபாய்க்கு நிவாரணப்பொதி

Kogilavani   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நகரிலுள்ள தனியார் வர்த்தக நிலையங்களில், 11 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி 950 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும் இந்த நிவாரணப் பொதிக்கு நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் ஹட்டன் நகர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

துண்டு மிளகாய் 100 கிராம், தேயிலைத்தூள் 100 கிராம்,  உப்பு ஒரு பக்கெட்,  கோதுமை மா 01 கிலோகிராம், நெத்தலி 200 கிராம்,  வெள்ளை அரிசி 01 கிலோகிராம்,  மைசூர் பருப்பு 01 கிலோகிராம்,  சீனி 01 கிலோகிராம்,  சிவப்பு அரிசி 01 கிலோகிராம்,  நாட்டு அரசி 01 கிலோகிராம்,  முகக்கவசம் 01 ஆகிய பொருட்கள் அடங்கிய பொதியே, 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தனியார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இந்தப் பொருட்களை, எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியுமாயின் அரசாங்கத்தினூடாக இன்னும் குறைவான விலையில் குறித்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க முடியும்” என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 பொருட்கள் அடங்கிய, சித்திரைப் புத்தாண்டு நிவாரணம் பொதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ள அரசாங்கம், அதனை சதொச விற்பனை நிலையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை (01) முதல் பெற்றுக்கொள்ள வழிசமைத்துள்ளது.

சதொச நிலையங்களில் 1,000 ரூபாய்க்கு குறித்த பொதி விற்பனை செய்யப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X