Editorial / 2020 மே 07 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது; ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். ஆனால் தற்போது பெட்டிப்பாம்புபோல் அடங்கியுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது” என்று அவர் கூறினார்.
பிரதமரைச் சந்தித்த பின்னர், சுமந்திரன் இவ்வாறு அடங்கியிருப்பதன் காரணம் என்ன என்று கேள்வியெழுப்பிய அவர், இதன் பின்னணியில் 'மெகா டீல்' இருக்கிறதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் கலந்துரையாடவே பிரதமரைச் சந்தித்ததாக கூட்டமைப்பு கூறிவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சியின்போது கூட்டமைப்பு வசமே எதிர்க்கட்சி பதவி இருந்தது என்று கூறிய அவர், ரணிலை வழிநடத்தும் வல்லமையும் இருந்தது என்றும் எனவே, அந்தக் காலகட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை என்றுமு் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்றும் அவர் கேள்வியழுப்பினார்.
கடந்த ஆட்சியின்போது கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்தது என்று கூறிய அவர், இனிவரும் ஆட்சியிலும் அத்தகையதொரு சுகபோகத்தை அனுபவிக்கவா முயற்சி எடுக்கப்படுகின்றது என்றும் வினவினார்.
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
58 minute ago
1 hours ago