Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
புத்தல பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட யுதஹனாவ- பன்சல வீதி பிரதேசத்தில், இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (18) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதுடன், சாதாரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கரும்பு வெட்டும் கத்தியால் தம்பியின் தலையை அண்ணன் வெட்டியுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரும் தமது பெற்றோரின் தான நிகழ்வுக்காக மற்றுமொரு சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் சகோதரர்கள் இருவரும் காயமடைந்து புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தம்பி மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கும் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .