Sudharshini / 2016 மார்ச் 18 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அரச வைத்தியசாலைகள் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் தற்காலிகமாக கடமைபுரிந்து வந்த, 354 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு (16) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மாரஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாகாண சபை பிரதி தலைவர் உதயகாந்த குணதிலக்க, சபை முதல்வர் அசோக ஜயவர்தன, மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் டபிள்யூ.எஸ்.சோமதாச, மாகாண சபை உறுப்பினர் எஹியா எம்.இப்ளார், மற்றும் மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago