Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.கேதீஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தலவாக்கலை நகருக்குப் பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, தலவாக்கலை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, தலவாக்கலை நகரில் தற்காலிக வியாபாரக் கடைகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொருட்கள் கொள்வனவுக்காக வரும் அதிக பொதுமக்கள் மத்தியில் திருடர்களின் நடமாட்டமும் காணப்படலாம்.
எனவே, தலவாக்கலை நகருக்கு வருகை தரும் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் சந்தேகத்துக்கிடமான முச்சக்கரவண்டியில் பயணிப்பது, தெரியாதவர்கள் ஏதேனும் பொருட்களைக் கொடுத்தால் வாங்குவதையும், உட்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் தங்களின் பணம் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படின், உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
40 minute ago