Kogilavani / 2021 மார்ச் 19 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரவுன்;ஸ்விக் குரூப், ராணி தோட்டத்தில் திடீர் தீ விபத்தினால் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள 20 குடும்பங்களும் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த போதே இந்த வாக்குறுதியை அவர் வழங்கியுள்ளார்.
மேற்படித் தோட்டத்தில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன்தொகுதியில், புதன்கிழமை (17) ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் 79 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகினர்.
மேற்படி மக்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று சந்தித்ததுடன், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளருக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு விரைவாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் இந்த 20 வீடுகளில் தங்கி இருந்த திருமணமான அனைத்து குடுபங்களுக்கும் தனி வீடுகளை அமைத்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்வீடுகளை அமைப்பதற்கான உரிய இடத்தைத் தெரிவுசெய்து தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின் பின்னர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக வீடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026