2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான 2 வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பொகவந்தலாவை குயினா தோட்டக் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமியான அனுஷா குமாரி, பாரிய தீக்காயங்களுடன், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே அவர், திங்கட்கிழமை இரவு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கண்டி வைத்தியசாலைக்கும் சென்றதாக தெரிவித்தனர்.

தான், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், தன்னுடைய குழந்தை அடுப்பில் தவறி விழுந்துவிட்டது என, அக்குழந்தையின் தாய், பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேகம் கொண்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், வீட்டின் சமையல் பகுதியில், குழந்தை தூங்குவதற்காக கட்டப்படிருக்கும் தொட்டிலுக்கு அடியில் கவிழந்து கிடந்த நிலையில், குப்பி லாம்பு ஒன்றையும் மீட்டுள்ளனர் என, அறியமுடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .