Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், 11 வயது சிறுமி ஒருவர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில், இன்று (11) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த எம்.பவித்ரா என்ற சிறுமியே, தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேற்படி சிறுமி, பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தப் பின்னர், அடுப்பை மூட்ட முயன்றபோது, அவரது ஆடையில் தீ பரவியுள்ளதாகவும் இதனால் அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்றும், பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்கைக்காக, கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
12 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
22 minute ago
28 minute ago