2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

தீபாவளியை முன்னிட்டு நலன்சார் வேலைத்திட்டங்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, மஸ்கெலியா பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பாக, பிரதேச சபைக்கு உட்பட்ட நகரங்களில், தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்தல், மும்மொழிகளிலான பெயர்ப் பலகைகளை வைத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதியன்று, மஸ்கெலியா நகரில் சனத்தொகை அதிகரித்துக் காணப்படும் என்பதால், பொதுச்சந்தையை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, மஸ்கெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் இணங்கியுள்ளதாகவும் எனவே, எதிர்வரும் காலங்களில், நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை விட, மஸ்கெலியா பிரதேச சபை, முன்னுதாரணமாகத் திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு, பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் அவசியமென்றும், அவர் கூறினார்.

இதேவேளை, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினரான குழந்தைவேல் சுரேஸ்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, மஸ்கெலியா - காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காக கடந்த வாரம் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்த கறுப்பன் தெய்வானை என்ற தொழிலாளிக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .