Janu / 2024 மார்ச் 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பதுளை, மெதபத்தனை பகுதியில் வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து தங்க வளையல் ஒன்றையும், 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 22 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர் .
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .
பாலித ஆரியவன்ச
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025