R.Tharaniya / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை டீ எஸ்டேட் பிஎல்சி நிறுவனத்தின் ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலை, தேயிலை துறை – நடுத்தர பிரிவு வகையில் தங்க விருது பெற்றுள்ளது.
இவ்விருது, தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை தேசிய சுத்தமான உற்பத்தி மையத்தில் (NCPC) நடத்தப்பட்ட தேசிய சுத்தமான உற்பத்தி விருதுகள் 2025 விழாவில் வழங்கப்பட்டது.
சுத்தமான உற்பத்தி, வளங்கள் திறமையாக பயன்படுத்துதல்,கழிவு குறைப்பு மற்றும் நிலைத்துத் திகழும் தொழில்துறை நடைமுறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கும் நிறுவனங்களை இவ்விருது கௌரவிக்கிறது.
இந்த உயரிய தங்க விருது, தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் வழங்கப்பட்டது. ஹோலி ரூட் தேயிலை தொழிற்சாலை, சுற்றுச்சூழல் நட்பு உற்பத்தி முறைகள் மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டில் செய்துள்ள சிறப்பான பங்களிப்பிற்காக இவ்விருதை பெற்றது.
தலவாக்கலை டீ எஸ்டேட் பிஎல்சி இவ்விருதைப் பெறுவதில் பெருமை தெரிவித்ததுடன்,இலங்கையின் தேயிலை தொழில் துறையில் நிலைத்த உற்பத்தி நடைமுறைகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதியளித்தது.

எஸ் சதீஸ்
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago