2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தேயிலை மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டெடன் தோட்ட தேயிலை மலையிலிருந்து, இன்று (5) பகல் ஆணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளார். 

ரொசல்ல ரயில் நிலையத்தை அண்;மித்த பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சடலமொன்று இருப்பதைக் கண்டு ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக சடலம்  டிக்கோயா மாவட்ட வைத்தியலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X