Kogilavani / 2021 மார்ச் 17 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கும் தொழில் அமைச்சுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் சவால் விடுத்துள்ளன என்பதே உண்மை என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்லும் நிலையில், தோட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் இத்தகையச் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், அரசியல் தொழிற்சங்க வேறுபாடின்றி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்துச் செயற்;பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதற்காக அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026