ஆ.ரமேஸ் / 2020 மே 21 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் சில விசமிகள் செயற்பட்டு வருவதாக, இச் சங்கத்தின் நுவரெலியா, அக்கரப்பத்தனை பிரதேச இணைப்பு செயலாளர் வி.புஸ்பாநந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (21) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “
தங்களது சங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவன் எனத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் சிலர், மக்களுக்கு இடையூறுகளை விளைவித்து வருகின்றமை தொடர்பான தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்களது தொழிற்சங்கம், நுவரெலியா , கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை , காலி, களுத்துறை, பதுளை போன்ற பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளராக வி.அருள்நாதன், இணைப்பு செயலாளராக வி.புஸ்பானந்தன், ஹட்டன் பிரதேசத்தில் இணைப்பு செயலாளர் அண்டனிராஜ் ஜெயகுமார் ஆகியோரின் கீழ் சொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாகச் செயற்படுவதாகவும் எவ்விதத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்துக்கும் அரசியல் பிரிவுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, தங்களது தொழிற்சங்கப் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை வண்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய அவர், இது குறித்த கட்சி உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026