2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மலையக ரயில் சேவைகள் முடங்கின

Kogilavani   / 2021 மார்ச் 18 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்

ரயில் சேவையாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தால்,  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று (17) மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும் இன்று(18) காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த பொடி மெனிக்கே மற்றும் காலை 8.30 மணிக்கு செல்லவிருந்த உடரட மெனிக்கே போன்ற ரயில்களும் சேவையில் ஈடுப்படவில்லை.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதில் சில பயணிகள் வீடு திரும்பியதோடு, சிலர் பஸ்களின் மூலம் பயணங்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்திருந்தது.

அத்துடன் இந்த தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக, சிவனொளிபாத மலைக்கு வருகைத்தந்த யாத்திரிகர்களும் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X