Kogilavani / 2021 மார்ச் 08 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை மஹாகுடுகலை, கிளன்டவோன் ஆகிய இரு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து, நேற்று (8) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி இரு தோட்டங்களையும் பொறுப்பேற்றுள்ள புதிய கம்பனி நிர்வாகம், கடந்த இரண்டு வருடங்களாக தேயிலை மலைகளைக் காடுகளாக்கி வருவதுடன் புற்களை அழித்தொழிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, கடந்த காலங்களில் அதிக இலாபத்தில் இயங்கி வந்த இந்த இரு தோட்டங்களும் தற்போது நட்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்டம் திடீரென நட்டத்தில் இயங்குவதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கு சேவையில் இருந்து விலகியதாகக் கூறப்படும் 45, 50 வயதுக்கு உட்பட்ட இராணுவத்தினர் ஐந்து பேரை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள இராணுவத்தினர், கடந்த 26 ஆம் திகதியிலிருந்து தேயிலை மலைகளில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்றும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்பார்வையாளர்களாக இராணுவத்தினர் பணியாற்றிவருவதால், தாம் சுதந்திரமாக பணியாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவித அச்ச உணர்வுடனேயே பணியாற்றி வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலைத் தோட்டங்கள், காடுகளாக்கப்பட்டதால் 187 தொழிலாளர்கள், தொழிலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தாமாக முன்வந்து காடுகளை வெட்டுவதற்கு முயற்சித்தாலும் தோட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தேயிலை மலைகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தமது பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்வரை தாம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக மேற்படித் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026