2025 ஜூலை 09, புதன்கிழமை

தொழிலாளர்கள் மீது தாக்குதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா பொலிஸ் பிரிவு, தெல்தொட்டை கிறேட்வெளி-லிட்டில்வெளி பிரிவில், இனந்தெரியாத குழுவொன்று, பெண் தொழிலாளர்கள் மீது மேற்கொண்டத் தாக்குதலில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் தெல்தொட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக, பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்தில் தோட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும்,  இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில், கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .