2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தோட்ட முகாமையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 மார்ச் 03 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன், டி.சந்ரு

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்ட முகாமையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்பு  ஆர்பாட்டமொன்று, இன்று (3) காலை  முன்னெடுக்கப்பட்டது.

தோட்டமுகாமையாளர் சங்கம் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்தது.  
2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம், தோட்ட முகாயையாளர்களுக்கு எதிராக மூன்று வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஓல்டன் தோட்டத்தில் முகாமையாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவத்தைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'அராஜம் ஒழிக', 'தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்து', 'தேயிலைத் தொழிற்துறையில் அரசியல் மயமாக்கலை நிறுத்து' போன்ற வாசகங்களை கையில் ஏந்திய வண்ணம் கோசமெழுப்பு ஆரப்;பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலைத் தொழிற்துறை நாட்டின் பெருளாதர வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றது என்றும் அத்துறையில் பணியாற்றும் தமக்கு, உரிய பாதுகாப்பை வழங்க நாட்டின் ஜனாதிபதி,  பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் சகல பெருந்தோட்ட முகாமையாளர்களும்  கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X