ஆ.ரமேஸ் / 2020 மே 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களில், மாதத்துக்கு 5,000 ரூபாய்க்குக் குறைவான சம்பளம் பெற்றோருக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்குமாறு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொவிட்-19 பாதிப்பை அடுத்து, மலையத்தில் தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், இது தொடர்பாக ஆராயும் பட்சத்தில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் சி.பீ ரட்நாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில், சுகாதாரத் துறை அமைச்சர் பவிரத்ரா வன்னியாரச்சி, நுவரெலியாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஸ்பகுமார தலைமையில், மாவட்டச் செயலக அதிசய மண்டபத்தில் இன்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, பெருந்தோட்டங்களில் 5,000 ரூபாய்க்குக் குறைவான மாத சம்பளத்தைப் பெற்ற தொழிலாளர்களுக்கு, தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போதே, இது தொடர்பாக, சீ.பி ரட்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்குமாறு, சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட்-19 தனிமைப்படுத்தல் மய்யத்துக்காக, ஸ்ரீபாத கல்லூரியை ஒழுங்கு செய்து தருவதாக, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளமையை வரவேற்பதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம், மேல் மாகாணத்தில் இருந்து இதுவரை 791 பேர் வருகை தந்துள்ள நிலையில், அவர்களில் எவராவது கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால், பொகவந்தலாவ, மஸ்கெலியா வைத்தியசாலைகளில் அவர்களை தனிமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, கண்டி தெல்தெனியா வைத்தியசாலையையும் தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், டெங்கு, எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதேச வைத்தியர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், டெங்கு ஒழிப்புத் துறையினருக்கு இது தொடர்பாக பணிப்புரை விடுப்பதாகவும் அத்துடன், டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச்சல் ஆகியவற்றுக்குத் தேவையான மருந்துகளை, ஐந்து செயலாளர் பிரிவுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தில் தற்போது 240 வைத்தியர்களின் குறைப்பாடு காணப்படுவதாக, வைத்தியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இது போன்ற வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்பட்டாலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, முடியுமான வரை வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, மலையகத்திலுள்ள அரச பணியாளர்களுக்கு வழங்குவதற்கு என, 1,500 பிளாஸ்டின் முகக்கவசங்களை, சுகாதார அமைச்சருக்கு, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அன்பளிப்பாக வழங்கினார்.
14 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
59 minute ago
3 hours ago