பா.திருஞானம் / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தோட்டப் புறங்களின் அபிவிருத்திக்கு, மலையகத் தலைமைகள் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் சேவை செய்துள்ளார்கள் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாராம் கூறியுள்ளார்.
கொத்மலை, வெவன்டன் தோட்டத்துக்கும் கோதை கிராமத்துக்குமாக நிர்மாணிக்கப்பட்ட உறவுப் பாலத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த பாலம், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தவைவருமான வீ. இராதாகிருஸ்ணனின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மலையக அரசியல் தலைமைகள், ஏதாவதொரு வகையில், மலையகத்துக்காகச் சேவை செய்துள்ளார்கள் என்பதை, யாராலும் மறுக்கமுடியாது. இனி, இந்த மக்களுக்குச் சேவை செய்யும் ஒவ்வொருவரும், கட்சி தொழிற்சங்க பேதமின்றி சேவை செய்ய வேண்டும். மிகவும் பின் தள்ளபட்ட நிலையில் வாழும் இவர்களின் வாழ்வில், முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், இந்த பேதங்கள் உடைத்து எறியபட வேண்டும்.
“பெருந்தோட்டம் அல்லது நுவரெலியா என்றதும், வீட்டுவேலைக்கு ஆட்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பிறருக்கு ஞாபகம் வருகின்றது. இந்நிலை, மலையகத்தில் மாறவேண்டுமானால், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை, நன்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும். அதற்கு, மலையத்தில் தற்போது போதிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இல்லாதவர்கள், எங்களிடம் தொடர்புகொள்ளுங்கள். எங்களால், உங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்பதற்காக தத்து எடுக்க முடியும்.
“மலையகம் முன்னேர வேண்டுமானால், அது கல்வி ஒன்றினாலேயே முடியும். அதேவேலை, மலையகத்துக்கான அபிவிருத்திகள், கட்சி தொழிற்சங்க பேதம் இன்றி செயற்பட வேண்டும்” என்றார்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026