Kogilavani / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பது தெளிவாகப் புரிகின்றது. நல்லாட்சியின் அங்கமாக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம், தனது கடமைகளை நன்றாக முன்னெடுக்கின்றது' என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்த நாளாக, ஜனவரி எட்டாம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
' ஊழல் மோசடி நிறைந்த ஓர் அரசாங்கத்தை மாற்றுவதற்கு மைத்திரிபால சிறிசேன, மக்களின் ஆணையை அன்று கோரியிருந்தார். மக்கள் எவ்வித தயக்கமுமின்றி அவருக்கு அதிகாரத்தை வழங்கினர். அதன் பிரதிபலிப்பு இன்று தெரிகிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்ததன் மூலம் நாட்டின் செயன்முறை சுதந்திரமாக இயங்கி வருகின்றது. ஒரு வருடத்துக்குள் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.
'அதற்காக எதிர்வரும் நான்கு வருடங்களையும் நல்லாட்சி அரசாங்கம் பயன்படுத்தும்' என அவர் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago