Sudharshini / 2016 மே 15 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செனரத் பண்டார
களுகமுவை மஹாவலி கங்கையில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 19 வயது இளைஞனின் மரணம் தொடர்பாக அவ்விளைஞனின் நண்பர்கள் நால்வரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பேராதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(13) மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற ஐந்து நண்பர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இவர்கள் நீராடி கொண்டிருந்தபோது மஹாவலி கங்கையில் திடீரென நீர்மட்டம் கூடியதால் மேற்படி ஐவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பிரதேசவாசிகளின் உதவியுடன் இவர்கள் ஐவரும் மீட்கப்பட்டப்போதிலும் 19 வயது இளைஞனான ஜி.ஜி.துமிந்த பண்டார என்ற இளைஞன் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இவரது மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவதற்காகவே மேற்படி நால்வரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் எலமல்தெனிய, முரதகஹமுல பிரதேசத்தை சேர்ந்தவரென்றும் இவர், அம்பேபுஸ்ஸவிலுள்ள இராணுவ முகாமில் பயிற்சிபெற்று வருபவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago