Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
நோர்வூட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்துக்கு நாளை (12) வருகை தருவதற்காக, மலையக மக்களின் போக்குவரத்துக்கென 600 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும் ஹட்டன் நகரசபையின் முன்னாள் தலைவருமான ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
“இந்தியப் பிரதமரை வரவேற்க வருகைதரும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, குடிநீர்த் தாங்கிகள், இலகுவான போக்குவரத்து வசதிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டி வசதிகள் போன்றவற்றை, த.முகூ ஏற்பாடு செய்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு, ஹட்டன், டிக்கோயா-கிளங்கன் மற்றும் நோர்வூட்டுக்கு நாளை (12) வருகைதரவுள்ளார்.
“அதேவேளை, சுமார் 1800க்கும் அதிகமான பொலிஸார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புக் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்த அவர், மைதானத்துக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பு, தொடர்ந்து கண்கானிக்கப்படுவதுடன் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், ஹட்டனில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026