2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நுவரெலியா ஹட்டனில் 'தனித் தமிழ் கல்வி வலயங்கள் வேண்டும்'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பினார்.

இம்மாவட்டத்தில் கல்விசார் அனைத்து விடயங்களும் சிங்கள மொழி மூலமே இடம்பெறுவதாகவும், தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு சிங்கள மொழி மூலமான பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் சென்று மேற்பார்வை செய்கின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா, ஹட்டன், ஹங்குராங்கெத்த, கொத்மலை, வலப்பன ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்த வரையில், நுவரெலியாவில் 116, ஹட்டனில் 106, வலப்பனையில் 26, கொத்மலையில் 37, ஹங்குராங்கெத்தவில் 11 என்ற வகையில் மொத்தமாக 296 பாடசாலைகள் உள்ளன.  

நுவரெலியா மற்றும் ஹட்டனில் மொத்தமாக 222 தமிழ்மொழி மூலப் பாடசாலைகள் உள்ளன. இவ்விரு வலையங்களிலும் சிங்கள மொழிமூலப் பாடசாலைகள் சுமார் 75 வரையிலேயே உள்ளன.

இந்த நிலையில், நுவரெலியா கல்வி வலயத்தில் சிங்கள மொழி மூலமான கல்விப் பணிப்பாளரின் கீழான நிர்வாகமே நடைபெறுகின்றது. ஹட்டன் கல்வி வலயத்தில் தமிழரல்லாத ஒருவர் பதவிக்கு வருவதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மொழிபுரியாத அதிகாரிகள் செயற்படுகின்ற நிலையில், அப் பகுதியில் தமிழ்க் கல்வி நிலையை மேம்படுத்த இயலாதுள்ளதாக அப்பகுதி கல்விசார் சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் சுமூகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் நடவடிக்கை எடுப்பாரா?' என அவர் கேள்வியெழுப்பினார்.

'மேற்படி மாவட்டத்தில் கல்விசார் அனைத்து விடயங்களும் சிங்கள மொழி மூலமே இடம்பெறுவதாகவும்;, தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கு சிங்கள மொழி மூலமான பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் சென்று மேற்பார்வை செய்கின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் மேலும் தெரிய வருகிறது.

இவ்வாறு மொழி புரியாத அதிகாரிகள் செயற்படுகின்ற நிலையில், அப் பகுதியில் தமிழ்க் கல்வி நிலையை மேம்படுத்த இயலாததாக உள்ளதாக அப்பகுதி கல்விசார் சமூகத்தினர் எடுத்துக் காட்டுகின்றனர்.

ஒரு மொழிமூலமான பாடசாலைகள் அதிகம் காணப்படுகின்ற கல்வி வலயத்தில் அம்மொழி மூலமான நிர்வாகக் கடமைகளை ஆற்றக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே அப் பாடசாலைகளின் மூலமான நோக்கங்களை முழுமையாக அடைய முடியும்.
அந்த வகையில் எமது நாட்டின் இலவசக் கல்விக் கொள்கையை எமது மாணாக்கர் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .