Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச். எம். ஹேவா
ஹட்டன் நட்சத்திர சதுக்கத்தில் குப்பைகள் குவிந்து கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதி வியாபாரிகள் மட்டுமின்றி அப்பகுதிக்கு வரும் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள் பலர், இந்த இடத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அப்பகுதியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதோடு, இவ்வாறான நிலைமைகளினால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், வியாபாரத்தை முறையாக நடத்த முடியாத நிலையும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன், அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நகரசபைக்கு இடமில்லை எனவும், இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை ரிகாடன் மற்றும் தலவாக்கலைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக, கழிவுகளை தனித்தனியாக தரம் பிரிக்கும் செயற்பாடுகள் குறித்த இடத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும், குப்பைகளை தரம் பிரிக்க வேறு இடமொன்று இல்லை என்றும் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றுவதற்கு உரிய இடம் வழங்கப்படாமையால் நகர சபையும், இப்பிரதேச மக்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல வருடங்களாக இதற்கான காணி ஒன்றை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago