Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
கினிகத்தேனை, பொல்பிட்டிய போட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலைய பணியால் நிர்க்கதிக்குள்ளான 33 குடும்பங்களுக்கு, நட்டஈடு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பாளர்கள், போட்லேன்ட் மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில், இன்று (28) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் விநியோகிக்கும் சுரங்கப்பதை நிர்மாணப்பணிகளால் அப்பகுதியைச் சேர்ந்த 33 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நட்டஈடுகோரி பாதிக்கப்படோர் ஆர்ப்பாட்டமொன்ற மேற்கொண்ட நிலையில், மின்சார சபையால் இரண்டு மாத கால அவகாசம் கோரியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடபட்டிருந்தது.
இரண்டு கால அவகாசம் கடந்த 25ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் ஒருமாத காலம் அவகாசம் கோரி மீண்டுமொறு கடிதம் பாதிக்கப்படோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காலம் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உடனடியாக நட்டஈட்டை வழங்கவேண்டும் என கோரியும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago