2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

’நவீன் போலிக்குற்றச்சாட்டுகளை கூறுகிறார்’

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் திகாம்பரம் மீதும் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் ​தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டக்கலையில், நேற்று (21) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 50 ரூபாய் கிடைப்பதற்கு, அமரர் ஆறுமுகன் தொண்டமான் முட்டுக்கட்டையாக இருந்தார் என, நவீன் திஸாநாயக்க, தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார் என்றும் உயிருடன் இல்லாதவர் பதில் எதுவும் கூறமாட்டார் என்பதாலேயே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, தீபாவளி முற்பணக் கொடுப்பனவை வழங்குவதற்கு, திகாம்பரம் முட்டுக்கட்டையாக இருந்தார் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தவரே, திகாம்பரம் தான் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .