2026 ஜனவரி 21, புதன்கிழமை

நான்கு பஸ்களின் மின்கலங்கள் திருட்டு; பொலிஸார் வலைவீச்சு

Kogilavani   / 2021 மார்ச் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டிகளில் மின்கலம்  (Battery) திருடப்பட்டுள்ளன என்று, பஸ்களின் உரிமையாளர்கள் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொகவந்தலாவை- பலாங்கொடை வீதி, பொகவந்தலாவை தபாலகத்திற்கு அருகில், நேற்று (25) இரவு மேற்படி நான்கு பஸ்களும் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

வழமைபோன்று இன்று (26) காலை பஸ்களை சாரதிகள் செலுத்திச் செல்ல முயன்றபோது, பஸ்களின் இயந்திரயம் இயங்கவில்லை என்றும் இந்நிலையில் பஸ்களின் மின்கலம் பெட்டியைத் திறந்துப் பார்த்போது, மின்கலங்கள் களவாடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் -பொகவந்தலாவை வீதியில், சேவையில் ஈடுபடும் நான்கு பஸ்களின் மின்கலங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நகரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளி உதவியுடன் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மின்கலம் ஒன்றின் விலை 40,000 ரூபாய் என்றும் மின்கலங்கள் திருடப்பட்டுள்ளமையால், தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்களின் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X