2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நான்கு வருடங்களில் அனைவருக்கும் குடிநீர்; ரூ.1,000 பில்லியன் ஒதுக்கீடு

Kogilavani   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நான்கு வருடங்களுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் இதற்காக நீர்வழங்கல் துறைக்கு, 1,000 பில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  கிராம மற்றும் பிராந்திய குடிநீர்த் திட்ட மேம்பாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

கண்டி மாவட்டச் செயலகத்தில், நேற்று முன்தினம் (21) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் தொகையில் 53 சதவீதமானோருக்கு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் நீர்வழங்குவதற்கு ஒரு விரைவான திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அடைவதற்கு கடினமாக உள்ள இலக்குகள், தேசிய பொது நீர்வழங்கல் துறை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றார். 

தரமான மற்றும் தூய்மையான நீரை வழங்குவதற்காக, அனைத்து நீராதரங்களையும் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். 

இத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், எந்தத் தாமதமும் ஏற்படாது என்று கூறிய அமைச்சர், திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக உள்ளூர் நீர் குழுக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X