Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுதந்தரலிங்கம்
டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் நிவ்டன் வீதி, 25 வருடங்களாகக் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை, சுமார் 25 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில், கர்ப்பிணிகளை பிரசவத்துக்காக அழைத்துச் செல்லும்போது இடையிலேயே பிரசவம் நடைபெற்று ஏழு சிசுக்கள் இறந்துள்ளன என்றும், எனவே, இனியாவது வீதியை புனரமைத்துத் தருமாறும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் - பொகவந்தலாவ, புளியாவத்தையை இணைக்கும் இந்த வீதி, சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்டது என்றும் இவ்வீதியை, போடைஸ். புளியாவத்தை, சாஞ்சிமலை, நிவ்டன், உள்ளிட்ட 25 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
இந்த வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் வீதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் புளியாவத்தை, போடைஸ், சாஞ்சிமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஐந்து கிலோமீற்றர் தூரத்துக்கு பதிலாக, சுமார் 10 கிலோமீற்றர் தூரம் டிக்கோயா வழியாகச் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், வாகன கூலியாக 1,800 ரூபாய் வரை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நேரத்துக்கு நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது போனதால், பலர் வழியிலேயே உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
5 minute ago
17 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
29 minute ago