2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் காயங்களுடன் மீட்பு

Editorial   / 2020 மே 19 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில், இன்று (19) நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அடைமழை காரணமாக, மேற்படி நபர் வளர்த்துவந்த ஆடுகள் இருந்த பட்டி மீது, மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. 

இதனையடுத்து பட்டிக்குள் இருந்த ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக மேற்படி நபர் சென்றுள்ளார். எனினும், வெள்ளம் பெருக்கெடுத்ததால் மூன்று ஆடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அவரும் தவறி நீரில் விழுந்துள்ளார். 

தீவிரமாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள் அவரைக் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .