Kogilavani / 2021 மார்ச் 18 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இருந்து கம்பளை பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொள்ளளும் நீரேந்து பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கில், பிரதான நீரேந்து பிரதேசங்களில் பயன் தரும் மரக்கன்றுகளை நடும் வேலைத் திட்டம் இன்று(18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச உலக நீர் தினத்தையொட்டி இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கம்பளை மரியாவத்தை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கம்பளை பிரதான பொலிஸ் உதவி அத்தியட்சகர் பிரியந்த, கம்பளை பிரதேச் செயலாளர் திருமதி என்.தென்னகோன,; மத்திய மாகாண தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் என்.மீகொட, எஸ் பிரியந்த,ஏ.ஜயவர்தன, எஸ்.குமார, எஸ்.எட்டியராச்சி தோட்ட அதிகாரி நுவான் விஜேசிங்க, புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச கிராம சேவகர்கள்;, சுகாதா அதிகாரிகள், கம்பளை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக புஸ்ஸல்லாவை வகுகவ்பிட்டி சப்லி சோகம தோட்ட நீரேந்து பகுதியில் பயன்தரும் பல விதமான மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் மண் அரிப்பை தடைசெய்யும் மூங்கில் மரங்களும் நாட்டப்பட்டன.







9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026