Kogilavani / 2021 மார்ச் 31 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து, கடந்த வியாழக்கிழமை(25) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அப்பெண்ணின் கணவரை ஏப்பிரல் மாதம் (07) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத் ஜெசேகர நேற்று (30) உத்தரவுப் பிறப்பித்தார்.
லிந்துலை திஸ்பனை தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்திரவள்ளி (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, பெண்ணின் உறவினர்கள் தலவாக்கலை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, அப்பெண்ணின் கணவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago