Kogilavani / 2021 மார்ச் 30 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு, ஆர்.ரமேஸ், நீலமேகம் பிரசாத், எம்.கிருஸ்ணா
நுவரெலியா மாநகரிலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும், நேற்று (30) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஏப்ரல் மாத வசந்த காலம் ஆரம்பமாவதை முன்னிட்டே, பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாநகரசபை மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலத்தின் அதிகாரிகள் 40 பேர் இணைந்து, திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, உணவகங்கள், வெதுப்பகங்கள், உணவு பொருள் விற்பனை சந்தைத்தொகுதி உட்பட மாநகரின் சகல பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்று, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில், எதிர்வரும் நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago