2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் கரட் விலை குறைகிறது

Editorial   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

நுவரெலியாவில் கரட் விலை நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் என வீழ்ச்சி அடைந்துள்ளதாக    நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம்  (02.02.2024) காலை அறிவித்துள்ளது.

அதேநேரததில் நேற்று (01.02.2024) வரை 850 ரூபாவுக்கு  மொத்த  விற்பணை விலையில் காணப்பட்ட கரட் வெள்ளிக்கிழமை (02) காலை 650 ரூபாயாக விற்பணை செய்யப்படுகிறது என  நுவரெலியா  பொருளாதார மத்திய நிலைய காரியாலயத்தின் முகாமையாளர் பண்டார தெரிவித்தார்.

இந்த நிலையில் பாரிய தட்டுப்பாடு கொண்டிருந்த கரட்  உள்ளிட்ட சில மரக்கறிகள்  கடந்த இரண்டு தினங்களாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தைக்கு தாராளமாக  வந்து கிடைப்பதாகவும் இதனால் விலை வீழ்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தற்போது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் குறைந்து வருவதுடன்  விலைகளும் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் (02.02.2024) இன்றைய தினத்தில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில்  மரக்கறிகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்  கோவா 520 ரூபாய், கரட் 650 ரூபாய்,லீக்ஸ் 320 ரூபாய்,ராபு 130 ரூபாய், இலை வெட்டா பீட் 470 ரூபாய், இலை வெட்டிய பீட் 570 ரூபாய்,உருளை கிழங்கு 320 ரூபாய், சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபாய், நோக்கோல் 370 ரூபாய் என மொத்த விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X