Gavitha / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில், இதுவரையில் யாரும் இறக்கவில்லை என, நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் குழுக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார் என்றும் எனினும் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று இல்லை என்று உறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இவ்வாறான செய்திகள் தெரிவிக்கப்படுவதற்கு முன்னர், ஒன்றுக்கு இரண்டு முறை, சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்தி, செய்திகளை வெளியிடவேண்டும் என்றும் அவர் கோரினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago