2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நூரளையில் சுற்றுலாத்துறை மீள்எழுச்சி

Kogilavani   / 2021 மார்ச் 02 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா மாவட்டத்தில், கடந்த பல மாதங்களாக முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறை மீள் எழுச்சிப்பெற்று வருவதாக, சுற்றுலாத் துறைசார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

நீண்ட காலத்துக்குப் பின்னர், பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பயண்கள், நுவரெலியாவுக்கு வருகை தருவதாகவும் நடைபாதை வியாபாரமும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத் துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

இதனால் பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள், படகு சவாரி, குதிரைச் சவாரி உள்ளிட்ட பல துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கடந்த 26ஆம் திகதியுடன் ஆரம்பமான மூன்று நாட்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியா நோக்கி வருகை தர ஆரம்பித்துள்ளனார் என்று, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு, அனைத்துத் தரப்பினருக்கும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X