Editorial / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் மேற்பிரிவில் இருந்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு வந்து கொண்டிருந்த மாணவி, வீதியில் வழுக்கி விழுந்து அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்ட பாரிய காயத்தால், அந்த மாணவி, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் மேல் பிரிவில் இருந்து நோர்வூட் நகரத்துக்கும், நோர்வூட் தமிழ் வித்தியாலயத்துக்கு செல்வோருக்கு ஒருங்கான வீதி இல்லை. குண்டும் குழியுமாகவும் மேடு பள்ளத்துடன், படிகள் இல்லாத குறுக்கு வீதிகளிலேயே பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது,
அவ்வாறான பாதையில் சென்றுக் கொண்டிருந்த போதே மாணவி ஒருவர் வழுக்கி விழுந்து, கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, பொறுப்பானவர்கள் இந்த வீதியையும் குறுக்கு வீதியையும் புனரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
39 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago