Kogilavani / 2017 நவம்பர் 30 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், மு.இராமாச்சந்திரன்
கடும் மழை காரணமாக, கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததால், நோர்வூட் பகுதியில் சுமார் 100 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்திலும் சிங்கள மகா வித்தியாலத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரவுக்குட்பட்ட கொட்டியாகல, செல்வகந்த, ஆரியபுர, பொகவான, குயினா, ஆகிய பகுதிகளில், நேற்று வீசிய கடும் காற்று காரணமாக, 200 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
சில வீடுகளின் கூரைகளில் போடப்பட்டிருந்த தகரங்கள் பல மீற்றர் தூரத்துக்கு வீசி எறியப்பட்டுள்ளன.
மலையகத்தின் பல பகுதிகளிலும் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பல வீதிகளின் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பொகவந்தலாவை, டின்சின் பகுதியில் மரக்கறி தோட்ட காவலாளி ஒருவர், வெள்ள நீரில் சிக்குண்டு இருப்பதாக அறிவித்ததனையடுத்து, பொகவந்தலாவை பொலிஸார் அவரை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொகவந்தலாவை டின்சின் பகுதியில் ஏற்றட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பொகவந்தலாவை பொகவான தோட்டத்தின் 10 குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தமையால், 30 க்கும் மேற்பட்டோர், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பாதிக்கப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் நோட்டன் - ஹட்டன் பிரதான வீதியிலும் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து 1 மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டது.


19 minute ago
31 minute ago
49 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
49 minute ago
59 minute ago