2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

நோர்வூட்டில் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்து: ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Editorial   / 2026 ஏப்ரல் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்று, இன்று காலை பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட்‌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாகப் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. பள்ளத்தில் இருந்த கெசல்கமுவ ஓயாவிற்கு அருகில் கார் வீழ்ந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பாதிப்பு விபரங்கள்: உயிரிழப்பு: விபத்தின் போது காரில் பயணித்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தோர்: காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை: விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .