Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கவிதா சுப்ரமணியம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாளிமார் சம்மேளத்துக்கும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, சம்பளத்தை அதிகரிக்கும் வரையாவது தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி படியாக 200 ரூபாயை கொடுக்குமாறு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் அமைச்சர் கோரினார் என்று இலங்கை தேசிய தொழிலாளர் சங்க நிர்வாக செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான ருத்திர தீபன் தெரிவித்தார்.
இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், 100 ரூபாயை தினசரி படியாக கொடுப்பது தொடர்பில் கலந்தாலோசித்த பின்னர் முடிவை அறிவிப்பதாக கூறியது என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், அமைச்சால் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைக்கும் முதலாளிமார் சம்மேளனம் பிடிகொடுக்காது இருக்குமேயானால், தோட்ட நிர்வாகங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026