Kogilavani / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இந்திக அருன குமார
மாத்தளை மாவட்டத்திலுள்ள உப- நகரங்களில் போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் எனவே, இந்நகரங்களில் போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தொடர்பில் அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தருமாறும் மாத்தளை பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
உப- நகரங்களில், தனியார் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை இலக்கு வைத்தே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
மாவட்டத்திலுள்ள உப-நகரங்களில் பாபுல், போதைப் பொருள் வில்லைகள் மற்றும் கஞ்சா என்பவற்றை தம்வசம் வைத்திருந்தவர் பலரை பொலிஸார், கடந்தவாரம் கைதுசெய்துள்ளனர்.
நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாடசாலை மாணவனும் இளைஞரொருவரும் போதைபொருட்களை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதுடன் நீதிமன்றிலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இப்பகுதியில் பாடசாலைகளையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து போதைபொருட்கள் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுப்பதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.
கோரிக்கைக்கு அமைய பொலிஸார், மேற்படி நகரங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்கள் தொடர்பில் அறிந்தால்; உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago