2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளில் 50,000 பேருக்கு வேலையில்லை

Kogilavani   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர்கள், யுவதிகளுக்கு உரிய தொழில்வாய்ப்பை, தோட்ட நிர்வாகங்கள் வழங்காத காரணத்தினால், அவர்கள் கொழும்பு போன்ற புறநகர்களில் மிகவும் அவதியுறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலைமைக்கு தோட்ட நிர்வாகங்களே காரணம் என இலங்கை தொழிலாளர் காங்கரிஸின் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அவிசாவலை பணிமனையில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'புள்ளிவிபரத்தின்படி 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலையக இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.  இவர்களில் சிலர் குறைந்த வருமானத்துக்காக பூந்தோட்ட வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொழும்பில் பணிபுரியும் பெண்கள், எஜமானர்களினால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.  

தோட்டங்களில் இப்போது தொழில் செய்ய ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது.  நிர்வாகங்கள் தன்னிச்சையாக எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் தோட்டங்களுடைய வளர்ச்சிக்கு குந்தகத்தை ஏற்படுத்துகின்றது. தோட்டங்களையே நம்பி வாழ்ந்தவர்கள், இன்று அவர்களுடைய இறுதிகால ஓய்வூதியத்தை கூடப் பெறாமல் கண்ணை மூடுவது  ஒருவிதமான வரலாற்றுப் பதிவுகள்தான்.

மலையக இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தோட்ட நிரவாகங்களின் கையில் 80 சதவீதமும் தொழிற்சங்க அமைப்புக்களின் கையில் 20 வீதமும் தங்கியுள்ளது.

தீக்குளிக்க முற்படும் அரசியல் ஜாம்பவான்களிடம் இதற்கு  பதில் இருக்கின்றதா?    இதனை தக்கமுறையில் பரிசீலித்து மலையக இளைஞர் யுவதிகளின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தோட்ட நிர்வாகங்கள் முன்வர வேண்டும்' என அவர் மேலும் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .