Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி
'ஜனவசம, அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றின் கீழுள்ள தோட்டங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றமையால் அத்தோட்டங்கள் விற்கப்படுவதோடு காடுகளாக்கப்பட்டு வருவதாக மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள், இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர். மலையக மக்களின் உரிமைகள், சுதந்திரம், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன பல வருடங்களாக முடக்கப்பட்ட நிலையிலே உள்ளது' என்றும் அவர் கூறினார்.
'பொதுநல வழக்குகளின் மூலம் நீதி, பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தல்' என்ற தொனிப்பொருளில் கண்டி, ரிவர்டெல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
'இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தோட்டப்புறங்களில் கல்வி, பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே, இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள், வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் என்ற நிலையில் இன்றி பிரஜைகள் என்ற அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும்' என்றும் அவர் இதன்போது கூறினார்.
இச்செயலமர்வுக்கு இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமை தொடர்பான சிரேஷ்ட சட்டத்தரணி கொல்வின் உரையாற்றுகையில்,
'மலையகத்தில் காணி, நிலம், தொழில்சார் பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் சீதனப் பிரச்சினைகள் என பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இப்பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார ரீதியாகவும் வறுமையினாலும் மிகவும் பின்தள்ளப்பட்ட மக்களாக உள்ளபடியால், நியாயங்களை கேட்டு வழக்குத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
மக்கள் பலம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், எந்த ஒரு சமூக பிரச்சினையாக இருந்தாலும் பி.பி.சிவப்பிரகாசம் போன்றவர்கள் பொது மக்களின் நலன் கருதி நியாயங்களை பெற்றுக்கொள்ள வழக்குகளை தொடரமுடியும்.
பல்லினங்களுக்கிடையிலான சமத்துவம், சகோதரத்துவம், இன மற்றும் கலாசார விழுமியங்கள், மனித கௌரவம் என்பவை மதிக்கப்பட வேண்டும். அதற்கு சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கையும் நடைமுறையும் மிக அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது' என அவர் மேலும் கூறினார்.



14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago