2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பெருநாள் முற்கொடுப்பணவு: இ.தொ.கா ஆட்சேபம்

Kogilavani   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துரட்ட பிளாண்டேசனுக்கு உரித்தான தோட்டங்களில், கடந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பெருநாள் முற்கொடுப்பனவுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து 65 ரூபாவை வட்டியாக தோட்ட நிர்வாகங்கள் அறவிடுகின்றமை குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

வட்டியை தொழிலாளர்களுக்கு மீள கையளிக்குமாறும் தோட்ட நிர்வாகங்களை இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இ.தொ.கா.வின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன், மத்துரட்ட பிளாண்டேசனின்; பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர்  மெனிக் வீரசிங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

'கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வட்டியை  எவ்விதத்திலும்
இ.தொ.கா ஏற்றுக்கொள்ளாது. அத்தொகை உடனடியாக மீளவும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக தொழிலாளர்கள் மீது சுமத்தும் பாரங்களை கைவிட வேண்டும். தொழிலாளர்களை பணயமாகவும் அடிமைகளாகவும் நடத்தும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்பதில் பின் நிற்க மாட்டோம்' என கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .