Kogilavani / 2017 ஏப்ரல் 26 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து, புரட்சிகர மக்கள் ஐக்கியம் என்ற அமைப்பின் கீழ், மே தினத்தைக் கொண்டாட தீர்மானித்துள்ளன.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக்கழகம், மலையக சமூக நடவடிக்கைக் குழு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்தே, இம்மேதினத்தை கொண்டாடவுள்ளன.
மேற்படி அமைப்பின் மே தினமானது, “நவதாராளவாத பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில், மே தினத்தன்று காலை 10 மணிக்கு, நடைபெறவுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய மையத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், குறித்த அமைப்புகளுடைய தலைவர்களின் மேதின உரைகளும், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இதன்போது, பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026